Monday, 19 May 2008

மன்னாரில் உக்கிர மோதல் தொடர்கிறது-

மன்னாரில் இரண்டு முனைகளில் கடுமையான மோதல்கள் தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று காலை ஆரம்பித்த மோதல்கள் இன்றும் உக்கிரமான வகையில் தொடர்வதாகவும் இருதரப்பிலும் பாரிய உயிர் சேதங்கள் ஏற்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் சுயாதீனமான தகவல்கள் எதனையும் உடனடியாக பெற்றுக் கொள்ள முடியவில்லை. இதேவேளை பாலம்பிட்டிப் பகுதியில் இருந்து படையினரால் மேற்கொள்ளப்படுகின்ற கடுமையான எறிகளை வீச்சால் பனங்காமம், நட்டங்கண்டல், பாண்டியன் குளம் பகுதிகளில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து செல்வதாக உறுதிப்படுத்தமுடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வவுணிக்குளம் வடகாடு பகுதிகளை நோக்கிச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: