இலங்கையில் அரசரகால சட்டம் தொடந்தும் அமுல் செய்யப்படுவதைப் போல உத்தியோகபூர்வமாகச் செய்தித் தணிக்கை கொண்டுவரப்படவில்லை. எனினும் இலங்கையில் போர் நடைபெறும் இடங்களுக்குச் செய்தியாளர் அனுமதிக்கப்படுவதில்லை என்ற விடயத்தை
இந்தோனிசிய பாலி நகரில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சர்வதேசச் செய்தியாளர் மாநாடு ஒன்றில் தாம் சுட்டிக்காட்டியதாக சண்டே டைம்ஸின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஊடகங்கள்; இராணுவத்தினர் போர் தொடர்பாகக் கூறும் கருத்துக்களை மற்றும் தகவல்களை மாத்திரமே செய்தியாக வெளியிடும் வழமையை கொண்டுள்ளன.
அதற்கு அப்பால் சென்று மறுபுறத்தில் தகவல்களைச் சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவம் யுத்தத்தில் இறந்ததாகக் கூறும் போராளிகளின் எண்ணிக்கையை நோக்கினால் அது வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் இரண்டு மடங்கினர் இறந்தமைக்குச் சமனாகும்.
சுதந்திர ஊடகங்கள்; தமது பணிகளைக் காத்திரமாகச் செய்வதற்கு இடமளிக்கப்படுவதில்லை.
உண்மையைச் சொல்வதற்காக ஊடகங்கள் அதிக விலையைக் கொடுக்கவேண்டியுள்ளதையும் குறித்த செய்தியாளர் சர்வதேச மாநாட்டில் தாம் சுட்டிக்காட்டியதாக இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு உதாரணமே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் த நேசன் ஊடகவியலாளர் கெய்த் தாக்கப்பட்டமையாகும் என இக்பால் தமது இன்றைய பாதுகாப்பு ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் கெய்தை கடத்திச்சென்றவர்கள்; அவர் இராணுவம் தொடர்பான தகவல்களை எங்கிருந்து பெறுகிறார் என்பதையும் விசாரணை செய்ததாக இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.
கெய்த்தின் கையடக்கத் தொலைபேசி அவர் கடத்திச் செல்லப்பட்ட தினத்தில் அதிகாலை 2 மணியளவில் நிறுத்தப்பட்டுள்ளது.
அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் யாவும் கடத்தல்காரர்களால் நிறுத்தப்பட்டன.
இதேவேளை கெய்த்தின் கைடயக்கத் தொலைபேசியைப் பின்னர் பரிசோதித்தபோது அவர் கம்பஹாவில் மல்வானை மற்றும் டெகாடென ஆகிய தொலைதொடர்புக் கோபுரம் ஆகியவற்றின் ஊடாகவே அவருக்கு அழைப்புகள் கிடைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனைக்கொண்டு அவர் கம்பஹா பிரதேசத்திலேயே தடுத்து வைக்கப்பட்டமை தெரியவந்துள்ளதாக இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் முகமாலையில் ஏற்பட்ட இராணுவப் பின்னடைவு போன்றவற்றைத் தடுக்க இராணுவத்தினர் மத்தியில் இருந்து செல்லும் தகவல்களைத் தடுக்கவேண்டியது அவசியமாகும் என இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குத் தொலைவில் உள்ள போர்ச் சூனியப் பிரதேசங்களைப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
தொடர்ந்தும் வான் படையினர் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதேசங்களில் பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.
இதில் ஒன்றே அண்மையில் 18 பொதுமக்கள் கிளிநொச்சியில் கிளைமோர்த் தாக்குதலில் கொல்லப்பட்டமையாகும் என இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அரசாங்கம் இந்த வருடத்திற்குள் தமிழீழ விடுதலைப்புலிகளை ஒழிக்கும் நடவடிக்கையை முற்றுச் செய்யமுடியாது எனப் படைத்தரப்பைக் கோடிட்டு இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசாங்கம் மனித உரிமைகளைப் பாதுகாத்து உரிய ஜனநாயகத்தை முன்னெடுக்காவிட்டால் முழு நாடும் சின்னாபின்னமாகும் என இக்பால் அத்தாஸ் எச்சரித்துள்ளர்.

No comments:
Post a Comment