Tuesday, 27 May 2008

த நேஷன் ஆசிரியர் கீத்நொயரின் செய்திமூலங்களை கண்டறியவே அவர் கடத்தப்பட்டார். - சித்திரவதைக்கு மத்தியிலும் அவர் அவற்றை வெளிவிடவில்ல

த நேஷன் ஆங்கில வார இதழின் பிரதிநிதி ஆசிரியர் கீத்நொயர்(வயது44) பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான சர்சைக்குரிய கட்டுரைகளுக்கான தகவல்களை எங்கிருந்து பெற்றுக் கொள்கிறார் என்பதை கண்டறிவதற்காகவே அவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார் என கூறப்படுகிறது

எனினும் ஊடகத்துறையின் முக்கிய பண்பியல்பான செய்திமூலங்களைக் காட்டி கொடுக்க கூடாது என்ற நெறியில் தீவிரமாக இருந்த நொயர் கடும் நெருக்கங்களுக்கு மத்தியிலும் தமது செய்தி மூலங்களை தம்மை கடத்தி சித்திரவதை செய்தோருக்கு வெளியிடவில்லை

என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன. கீத் நொயர் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக தமது பத்திரகையில் வாராந்தம் கட்டுரைகளில் அம்பலமான இராணுவத்தரப்பு தகவலால் பாதிக்கப்பட்ட உயர்மட்டங்களே இந்த கடத்தலின் பின்னணியில் செயற்பட்டிருக்க வேண்டும்

என கருதப்படுகிறது கீத்நொயரை கடத்தி சித்திரவதை செய்வதன் மூலம் பாதுகாப்பு துறையில் அவருக்கு தகவல்களை கசியவிடும் ஆட்களை கண்டறிவது இக்கடத்தலி;ன் இலக்கு என்று தெரிவிக்கப்படுகிறது. கீத்நொயர் கடத்தப்பட்டமை தொடர்பாக த நேஷன் பத்திரிகை நிர்வாகம் விரைந்து செயற்பட்டு உயர்மட்டத்தில் பெரும் அழுத்தத்தை உடனடியாக உருவாக்கியமையினாலே கீத்நொயர் கொல்லப்படாமல் விடுவிக்கப்பட்டார்

என்றும் சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் பேசப்படுகிறது. கடத்தப்பட்டு கண்கள் கட்டப்பட்டு வாயில் துணி அடையப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட நிலையிலும் தமது செய்தி மூலங்களை காட்டிக் கொடுக்காமல் பாதுகாப்பதற்காகவே கீத்நொயர் தமக்கு இழைக்கப்பட்ட உடல் சித்திரவதை உபாதைகளை பெரும் வேதனையுடன் சகித்துக் கொண்டார் என மேலும் அவ்வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

No comments: