Sunday, 25 May 2008

அக்கரைப்பற்றில் கருணா குழுவின் முன்னாள் உறுப்பினர் மீது துப்பாக்கிச் சூடு

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று காவற்துறைப் பிரிவில் ஏ.வீ.வீ வீதியில் ஒருவர் சுடப்பட்டுள்ளார். நேற்று (25மே) இரவு 7.10 அளவில் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கடுமையான காயங்களுக்கு உள்ளான இவர் கருணா குழுவின் முன்னாள் உறுப்பினரான 38 வயதுடைய பௌசர் என்று அழைக்கப்படும் ஆதம்லெப்பை இஸ்ஸடீன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலையில் கடுமையான சூட்டுக் காயங்களுக்கு உள்ளான இவர் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் அம்பாறை வைத்திசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தனது பிள்ளைகளுடன் மோட்டசைக்கிளில் தனியார் வைத்திய நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது இவரைப் பின்தொடர்ந்த மோட்டார்சைக்கிள் துப்பாக்கி நபர் இவர்மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments: