பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்படுவோர் அல்லது காணாமல் போவோர் தொடர்பான தகவல்களை அவர்களது உறவினர்களுக்கு வழங்கும் வகையில் விசேட தொலைபேசி சேவையொன்றை மனித உரிமைகள் அமைச்சு நாளை (மே 7) முதல் ஆரம்பிக்கவுள்ளது.
இந்த சேவையின் முதல் கட்டம் எட்டு மாதங்கள் வரை செயற்படுத்தப்படும் என மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளுடன் கடந்த 5ம் திகதி விசேட பேச்சுவார்த்தையொன்றை அமைச்சர் நடாத்தியுள்ளார்.
011 2676513 மற்றும் 060 2119246 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் மூன்று மொழிகளிலும் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.
Tuesday, 6 May 2008
கைது செய்யப்பட்டோர் தொடர்பான தகவல்களை வழங்க துரித தொலைபேசி சேவையொன்று
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment