'லங்கா டிசன்ற்' இணையத்தளத்தை சீர்குலைத்தமை தொடர்பாக சுதந்திர ஊடகம் இயக்கத்தினால் கடந்த 17 ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட அறிக்கையொன்று நேற்று திங்கட்கிழமை ஊடகங்களில் வெளியானது தொடர்பில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தமது அமைச்சுக்கு எதிராக சுமத்தப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டு இதுவென தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, இணையத்தளத்தை எவ்வாறு சீர்குலைப்பது என்பது பற்றி அறிந்த அல்லது அது தொடர்பில் சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் பிரிவு எதனையும் தாம் கொண்டிருக்கவில்லையென தெரிவித்துள்ளது.
இது தொடர்பான இலத்திரனியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிபுணர் எவரும் அமைச்சில் பணியாற்றவில்லையெனவும், இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடவில்லையெனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அமைச்சிடமிருந்து உண்மை நிலையை தெரிந்துகொள்ளாமல் ஊடகங்களிற்கு இந்த அறிக்கையை வெளியிட்டமை தவறானதென பாதுகாப்பு அமைச்சு தனது இணையத்தளத்தில் வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரிவித்துள்ளது.
தற்சமயம் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடக சுதந்திரம் குறித்து பேசுபவர்கள் மத்தியில், கூடுதலான கவனத்தைப் பெற்றிருக்கும் இவ்விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துக்கும், நாட்டிற்கும் களங்கும் விளைவிக்கும் நோக்கத்துடன் இந்த அறிக்கை பிரசுரிப்பட்டிருப்பதாக அமைச்சு குற்றம்சாட்டியுள்ளது.
எனினும் அமைச்சின் நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை நீக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, 20 May 2008
இணையத்தள சீர்குலைப்பிற்கும் எமக்கும் சம்பந்தமில்லை - பாதுகாப்பு அமைச்சு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment