Sunday, 18 May 2008

கொழும்பு தற்கொலைக் குண்டுதாரி வியாபாரியாக அறிமுகமானவர்

கொழும்பு கோட்டை சம்போதி விகாரைக்கு அருகில் காவல்துறை பேரூந்தை இலக்கு வைத்து குண்டை வெடிக்க செய்த தற்கொலை குண்டுதாரி, தன்னை சிறுபான்மை இன வியாபாரியாக அடையாளப்படுத்தி கொண்டவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் தாக்குதலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்களை திருகோணமலையில் இருந்து கடந்த 23ஆம் திகதி அவர் கொழும்புக்கு கொண்டு வந்துள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.


குறித்த மோட்டார் சைக்கிள் பிள்ளையான் குழுவின் முக்கிய உறுப்பினர் ஒருவரது பெயரில் பதிவுசெய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து திருகோணமலையை சேர்ந்த ஜனா என்ற சந்தேக நபர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.


இந்த நிலையில் பிள்ளையான் குழுவை சேர்ந்த ஒருவரின் அடையாள அட்டை கடந்த சுனாமி அனர்த்தின் போது காணாமல் போனதாகவும், காணாமல் போன அந்த அடையாள அட்டையை பயன்படுத்தி மோட்டார் சைக்கிளை பதிவுசெய்துள்ளதாக கூறப்படும் கதை குறித்தும் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

source:குளோபல் தமிழ்செய்தி

No comments: