எதிர்வரும் ஜூலை மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநட்டை சீர்குலைக்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக காவல்துறைப்புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. கொழும்பில் பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு அதன் மூலம் தலைநகரில் சார்க் மாநாட்டை நடத்தக் கூடியளவு பாதுகாப்பு இல்லை என உலகிற்கு எடுத்துக்காட்ட புலிகள் முனைவதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்ற குண்டுத் தாக்குதலும் இந்த சதித் திட்டத்தின் ஓர் முயற்சியாகும் என தெரியவருகிறது.
சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் அரச தலைவர்கள் கொழும்பு நட்சத்திர விடுதிகளில் தங்க வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலைமையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களினால் சார்க் மாநாடு ரத்து செய்யப்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதே புலிகளின் திட்டம் என பொலிஸ் புலனாய்வுத் துறை அதிகாரியொருவருர் திவயினவிற்கு தெரிவித்துள்ளார்.
சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் குறித்த நாடுகளின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகவும் இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக வெளிக்காட்டும் நோக்கிலேயே புலிகள் இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sunday, 18 May 2008
கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை குழப்புவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டம் - புலனாய்வுதுறை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment