ஒக்ஸ்போட் யூனியன் மற்றும் ஒக்ஸ்போட் பல்கலைக் கழக இலங்கைச் சங்கம் ஆகியவற்றின் அழைப்பின் பேரில் இலண்டனுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி, இலங்கையின் கிராமியப் பொருளாதாரத்திற்கு வலுவூட்டுவதற்கான உபாயம் எனும் கருப்பொருளில் உரையாற்றவுள்ளார். ஒக்ஸ்போட் யூனியனில் கௌரவ பேச்சாளராக உரைநிகழ்த்தவுள்ள முதலாவது இலங்கை அரச தலைவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவாகும். ஒக்ஸ்போட் யூனியனில் அவர் முன்னர் பதவி எதனையும் வகித்திருக்கவில்லை. இறுதியாக ஒக்ஸ்போட் யூனியனில் உரையாற்றிய இலங்கையர் மறைந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமாராகும்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை ஒக்ஸ்போட் யூனியனில் உரையாற்றவுள்ளார்.
Tuesday, 13 May 2008
ஒக்ஸ்போட் யூனியனில் இன்று ஜனாதிபதி உரை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment