Thursday, 8 May 2008

பானம பௌத்த விஹாரைக்கு அருகில் பிள்ளையான் குழு முகாமைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன - ஜே.வி.பி.




















பானம பௌத்த விஹாரையொன்றிலிருந்து 100 மீற்றர் தொலைவில் பிள்ளையான் குழுவினர் சிறுவர் போராளிகளைப் பயன்படுத்தி முகாமைகளை அமைத்து வருவதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.



தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பானம பிரதேச ஒக்கந்த விஹாரைக்கு அருகாமையில் இரண்டு முகாம்கள் அமைத்துவருவதாகத் தெரியவருகிறது.

கடந்த 6ஆம் திகதி இரண்டு பேரூந்துகளில் பாணம பிரதேசத்திற்கு சென்ற டி.எம்.வி.பியின் உறுப்பினர்கள் பலவந்தமாக பாணம காட்டு பகுதியில் இந்த
முகாம்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றைய தினம் இரண்டு பஸ் மற்றும் ஒரு வான் வண்டியில் முகாம் அமைப்பதற்கான பொருட்கள் கொண்டு வரப்பட்டதாகத் தெரியவருகிறது. இந்த முகாம் அமைக்கும் பணிகளில் 15 வயதுக்குக் குறைந்த சிறுவர் போராளிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் சுவரொட்டிகள் பாணம பகுதியில் கிழித்தெறிப்பட்டுள்ளதுடன், அலுவலகங்கள் உடைக்கப்பட்டுள்ளன. இந்த விடயங்கள் குறித்து பாதுகாப்பு தரப்பினர் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் பொதுமக்கள் நடமாடக்கூடாதென பிள்ளையான் குழுவினர் அச்சுறுத்தியுள்ளதாகவும் இரவு நேரங்களில் துப்பாக்கிச் சூட்டு ஒலி கேட்பதாகவும் குறித்த பிரதேசத்தில் உள்ள விலங்குகள் வேட்டையாடப் படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ இணையதளமொன்றுக்கு இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

No comments: