சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிஸ்வான் மாகாணத்தில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 12ம் தேதியன்ற இதே பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 12000 பேருக்கு மேல் பலியாயினர். இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் நடவடிக்கைகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த பரிதாபம் நடந்துள்ளது. கடந்த முறையைவிட இந்த பூகம்பம் கடுமையாக இருந்தது. 12ம் தேதி ஏற்பட்ட பூகம்பம் ரிக்டர் அளவில் 7.61 ஆக பதிவாகியிருந்தது. பயங்கர பூகம்பம் ஏற்பட்ட சில நாட்களில் மீண்டும் லேசான பூகம்பம் ஏற்படுவது வழக்கம் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் தற்போது முந்தைய பூகம்பத்தை விட கடுமையாக ஏற்பட்டுள்ளதால் சேதம் இன்னும் அதிகமாகும் என்று அஞ்சப்படுகிறது. |
Thursday, 15 May 2008
சீனாவில் இன்று மீண்டும் பயங்கர பூகம்பம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment