Thursday, 22 May 2008

தமிழ் மக்கள் அனைவரையும் புலிகள் என முத்திரை குத்தும் அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப்போகிறது -கிரியெல்ல எம்.பி

தமிழ் மக்கள் அனைவரையும் புலிகள் என முத்திரை குத்தும் அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப் போகிறது. வெட்ஜிக் ஹியூமன் அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜெர்மன் சென்றுள்ளார்.

தலைவரின் பயணத்தையும் நொயெல் செல்வநாயகம் என்ற வர்த்தகரின் ஜேர்மன் பயணத்தையும் முடிச்சுப்போட்டு புலி முத்திரை குத்த அரசு முயற்சிக்கிறது. என்று ஐ.தே.கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

இலங்கை தொடர்பாக பொய்யான தகவல்களை வழங்குவதற்காக ரணில் வெளிநாடு சென்றுள்ளார் என அரச ஊடகங்கள் அனைத்தும் பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளன. ஐ.நா மனித உரிமை பேரவையின் அங்கத்துவம் கிடைக்காது போய் விடுமோ என்ற அசச்சத்தில் அதற்கு முன்பே ஐ.தேகட்சிமீது பழியை சுமத்திவிட்டது.

இதுதான் உண்மை. வெட்ஜிக் ஹியூமன் அமைப்பின் 50வது வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவ்வமைப்பினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கமையவே தலைவர் ஜேர்மன் பயணமானார்.

அதேவேளை நொயல் செல்வநாயகம் என்ற தமிழ் வர்த்தகரும் அங்கு சென்றுள்ளார்.

இதற்கு காரணம் காலியில் அமைக்கப்பட்டு வரும் சுனாமி வீடமைப்புத் திட்டம் தொடர்பானதாகும். ஆனால் இரண்டிற்கும் முடிச்சுப் போட்டு அரசாங்கம் அந்த தமிழ் வர்த்தகர்களுக்கு புலி முத்திரை குத்த முனைகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: