Thursday, 22 May 2008

மக்களின் பாவனைக்கான பேருந்துகள் சிங்கள படையினருக்கு அனுப்பிவைப்பு

மக்களின் பயன்பாட்டிற்கென அனுப்பவுள்ளதாகக் கூறப்பட்ட பேருந்துக்களில் 40 பேருந்துகளை இலங்கை போக்குவரத்துச் சபை மன்னார் மாவட்டத்தில் உள்ள சிறிலங்காப் படையினரின் பயன்பாட்டிற்கு அனுப்பியுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபை 70 புதிய பேருந்துகளை மட்டக்களப்பு டிப்போக்களுக்கும் 30 பேருந்து யாழ். மாவட்ட டிப்போக்களுக்கும் மக்களின் பயன்பாட்டிற்கென அனுப்புவதாகக் கூறியிருந்தது.

இவ்வாறு கூறப்பட்ட பேருந்துகளில் இவ்வருடம் யாழ். மாவட்டத்திற்கு ஒரு பேருந்து கூட அனுப்பப்படவில்லை. மட்டகளப்பு டிப்போக்களுக்கும் 60 பேருந்து மட்டும் அனுப்பப்பட்டுள்ளது.

No comments: