Thursday, 22 May 2008

சூரிய வெவ பகுதியில் புதிய காவலரண்கள்

சூரியவெவ பகுதியில் உடவளவை லுணுகம்வெவெற எல்லைப் புறத்தில் புதிய மூன்று காவல் அரண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மககல்வெவ, அந்தரவெவ, பல்புதுகல ஆகிய இடங்களில் இக்காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகள் இக்காட்டுப் பகுதியூடாக ஊடுருவுவதைத் தடுக்கவும், மரங்கடத்தல் என்பவற்றை தடுக்கவுமே இந்தக் காவல் அரண்கள் அமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இப்பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: