* ராஜகிரிய பகுதியில் ஆயுத பாணிகள் கைவரிசை

ராஜகிரியவில் புடவைக் கைத்தொழில் அமைச்சின் செயலாளரது வீட்டினுள் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு நுழைந்த ஆயுத பாணிகள் அங்கிருந்த பல முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
ராஜகிரிய அம்பஹஸ்கண்டிய பகுதியிலேயே புதன்கிழமை இரவு 10 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவர், அமைச்சின் செயலாளர் திமுத்து சம்பத் ஹெட்டிகே வீட்டை நோக்கி துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு பின்னர் வீட்டினுள் நுழைந்துள்ளனர்.
தலைக்கவசங்களை அணிந்தவாறு வீட்டினுள் நுழைந்த இவர்கள் திமுத்து சம்பத்தையும் அவரது மனைவியையும் துப்பாக்கிமுனையில் மிரட்டி இருவரது கைகளையும் பின்புறமாகக் கட்டி அறையொன்றுக்குள் விட்டு மூடியுள்ளனர். அதன் பின் ஆயுதபாணிகள் இருவரும் வீடு முழுவதும் தேடி அமைச்சின் ஆவணங்களையும் வேறு ஆவணங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

ஜே.வி.பி. தொடர்பாக இவர் வெளியிட்ட பல்வேறு தகவல்களால் இவர் அண்மைக் காலமாக பெரிதும் பேசப்பட்டு வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ராஜகிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:
Post a Comment