Sunday, 18 May 2008

வலிகாமத்தில் இராணுவ ஒத்திகை இரவுபகலாக குண்டு வெடிப்புகள்

வலிகாமம் வடக்கின் பாதுகாப்பு வலயம் மற்றும் அதனை அண்டிய கடற்பிரதேசங்களில் மீண்டும் இராணுவ ஒத்திகை நடவடிக்கைகளை படைத்தரப்புகள் முடுக்கி விட்டுள்ளன.

முப்படைகளும் இணைந்து இவ்ஒத்திகை நடவடிக்கைகளை கடந்தவாரம் பெருமெடுப்பினில் நடத்தியுள்ளது. விமானப்படையின் தாக்குதல் ஹெலிகளுடன் குண்டுவீச்சு விமானங்களும் கடற்படை டோறாப் படகுகளும் இவ்ஒத்திகையில் பங்கெடுத்தன.

காங்கேசன்துறை மற்றும் அதனையண்டிய மயிலிட்டி மற்றும் வல்வெட்டித்துறை கடற்பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசங்களில் கடற்படையின் டோராப்படகுகள் இவ்ஒத்திகையின்போது நிலைக்கொள்ள வைக்கப்பட்டிருந்தன


ஏற்கனவே இக்கடற்பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபட உள்ளூர் மீனவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்ததால் அங்கு மீனவர்கள் எவரும் காணப்படவில்லை மறுபுறத்தே தொண்டமானாறு கடல் நீரேரிக்கு அப்பாலுள்ள உயர்பாதுகாப்புகளையும் உள்ளடக்கியே இவ்வொத்திகை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன இரவு பகலாக இப்பகுதியில் குண்டுவெடிப்புச் சத்தங்களும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்களும் கேட்டு வருவதாக தொண்டமானாறு மற்றும் இடைக்காடு கிராம மக்கள் கூறுகின்றனர்.


இவை வழமையான பயிற்சி நடவடிக்கை போலன்றி பெரும் ஒத்திகை நடவடிக்கைகளென அவர்கள் நம்புகின்றனர். முகமாலை முன்னரங்க பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற பெடுமெடுப்பிலான இராணுவ நடவடிக்கைகளின் பின்னர் இவ்ஒத்திகை நடவடிக்கைகள் முனைப்பு பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.

No comments: