Sunday, 18 May 2008

ஆயுதத் தொழிற்சாலை ‘பிங்கிரியவில்’ கண்டுபிடிப்பு


கஹவத்த பொலிஸார் நேற்றுமுன்தினம் இரவு பிங்கிரிய என்ற இடத்தில் திடீர் சோதனையொன்றை நடத்தி ஆயுதத் தொழிற்சாலை ஒன்றினை கண்டு பிடித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றையடுத்து பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி வித்தாரனவின் ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட தொழிற்சாலையில் விஷேட பொலிஸ் குழுவினர் சோதனை செய்தனர்.

இச்சோதனையின் போது ரி56ரக துப்பாக்கிகள், துப்பாக்கிகளுக்கான சன்னங்கள் உட்பட பல பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் அங்கிருந்த இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் நேற்று சனிக்கிழமை மாலை பெல்மதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை கஹவத்த பொலிஸார் மேற்கொண்டிருந்தனர் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: