ககோஷிமா, ஜப்பான்: திருடர்களை பிடிக்க, பயங்கரவாதிகளை சமாளிக்கத்தான் பாதுகாப்புப்படை அமைக்கப்படும்; ஆனால், காகங்களை கண்காணித்து விரட்ட தனி பாதுகாப்புப்படை அமைத்துள்ள அதிசயம் பற்றி தெரியுமா?ஆம், ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள தீவு கைஷு. ஜப்பானில் காகங்கள் எண்ணிக்கை அதிகம். அதுபோல, அதைச்சுற்றியுள்ள தீவுகளிலும் காகங்கள் பல மடங்கு பெருகி விட்டன. தெருக்களில் நடக்க முடியவில்லை;
காகங்கள் கூடு கட்டுவதை: சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளது. வீடுகளில் உள்ள குழந்தைகளை பதம் பார்த்து விடுகின்றன. இதையெல்லாம் விட, இந்த தீவில் அடிக்கடி மின்தடை ஏற்பட காகங்கள் தான் காரணம் என்பது தான் அங்குள்ள மக்களுக்கு தீராத தலைவலியாக உள்ளது. உயர்அழுத்த மின் கம்பங்களில் காகங்கள் கூடு கட்டி விடுவதால், மின்சார வினியோகம் தடைபடுகிறது. இதனால், மக்களுக்கு வினியோகம் செய்யப்படும் மின்சாரம் தடைபடுகிறது. ஒவ்வொரு முறையும் , காகங்கள் கூடு கட்டுவதை கண்டுபிடித்து தடுக்க வேண்டிய நிலை, மின்சார ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கூடு கட்டினால் மட்டுமல்ல, பாதி சாப்பிட்ட மாமிச துண்டு உட்பட சில பொருட்களையும் மின் கம்பம் மீது போட்டு சென்று விடுகின்றன காகங்கள்.
குழந்தைகளை பாதுகாப்பதில் பிரச்னை : இதனாலும், மின் சப்ளை பாதிக்கிறது.இதனால், தீவில் காகங்களை கண்காணிக்க தனி பாதுகாப்புப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படையினர், பல சாலைகளில், மின்சார கம்பிகள் செல்லும் பகுதிகளில் காகங்கள் உட்காராமல் விரட்டியபடி உள்ளனர். வட அமெரிக்க பகுதிகளில் உள்ள காகங்கள் தான் பருந்து அளவுக்கு பெரிதாக, குரூரமாக இருக்கும் என்று சொல்வதுண்டு.ஆனால், அதை விட மிகப்பெரிய அளவில் காகங்கள் , இந்த தீவில் இருக்கின்றன. அதனால், அவற்றிடம் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதில் பெரும் பிரச்னையாகவும் உள்ளது.
ஜப்பான் நாட்டில் எந்த பகுதியிலும் காகங்களை காணலாம். மனிதர்களுடன் சாலைகளில் காகங்களும் செல்வதை சகஜமாக பார்க்க முடிகிறது.
Sunday, 18 May 2008
காகங்களை விரட்ட தனி போலீஸ் படை!: ஜப்பான் தீவில் இப்படியும் அதிசயம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment