Sunday, 18 May 2008

யுத்த அகதிகளாகிய மாணவர்களுக்கு இலவச நூல்கள் இல்லை

மூதூரில் இருந்து யுத்த அகதிகளாக இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியுள்ள மாணவர்களுக்கு இலவசப் பாட நூல்கள் கிடைக்கப்பெறவில்லை என கவலை வெளியிடப்பட்டுள்ளது.


2008 ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகி 5 மாதங்கள் முடிவடைய உள்ள நிலையில் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அதிபரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


இது குறித்து மூதூர் கல்வி வலையப் பணிப்பாளர், மாகாண கல்விப்பணிப்பாளர், மாகாண கல்விச் செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியப்படுத்தியும் பலன் கிடைக்கவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.


அதிபர்கள் ஆசிரியர்களின் முயற்சியால் பாடசாலைகளில் சில நூல்களைக் கொண்டு பாடங்கள் கற்பிக்கப்படுவதாகவும், எனினும் முகாம்களில் அவற்றை மீட்டுப் பார்க்க மாணவர்களுக்கு நூல்கள் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.


இது குறித்து மாகாணத்தில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட கல்வி அமைச்சர் விமல்வீரதிஸ்ஸநாயக்கா தான் கடமைகளைப் பொறுப்பேற்றவுடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

No comments: