Monday, 19 May 2008

பிள்ளையான் உலகிற்கே ஓர் முன்னுதாரணமாக திகழ்கிறார் – மல்வத்துபீட தேரர்

யுத்தத்தைவிட ஜனநாயக நீரோட்டம் எவ்வளவு சிறந்ததென்பதை உணர்ந்து கிழக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்றுள்ள பிள்ளையான் உலகிற்கே ஓர் முன்னுதாரணமாக திகழ்வதாக கண்டி மல்வத்து அஸ்கிரி மாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் கண்டி தலாத மாளிகையில் வழிபாடுகளை மேற்கொண்டு மல்வத்து பீட அஸ்கிரி மாநாயக்க தேரர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்ட போதே மாநாயக்க தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் தலாதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொள்வது நாட்டில் வழமையாக இடம்பெற்றுவரும் கலாச்சாரமாகும். அந்த வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானும் இந்த வழிபாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக லக்பிம செய்தி வெளியிட்டுள்ளது.

கண்டி தலதா மாளிகை மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக தமது வருத்தத்தை பிள்ளையான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதென லக்பிம செய்தி செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

Anonymous said...

pundaiyaandikku; mannikkavum pillaiyaanukku oru kaavi porthividdaal nanraaga irukkum