Tuesday, 13 May 2008

கிழக்கு மாகாணத்திற்கு அதிகாரங்கள்: உறுமுகிறது. ஹெல உறுமய!!!

கிழக்கு மாகாணத்திற்கு காணி, மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படுமானால் அதனை கடுமையாக எதிர்க்க போவதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

எவர் எதனை கூறினாலும், கிழக்கு மாகாணத்திற்கு காவல்துறை, காணி அதிகாரங்களை வழங்குவதற்கு ஜாதிக ஹெல உறுமய இடமளிக்காது என அதன் தலைவர் எல்லாவள மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர், முஸ்லீமோ, தமிழரோ என்பதில் தமக்கு பிரச்சினை இல்லை எனவும் தெரிவுசெய்யப்படும் முதலமைச்சர் கிழக்கில் இருந்து விரட்டப்பட்ட சிங்களவர்களை மீண்டும் அங்கு குடியமர்த்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மாகாண சபை முறைமையை ஜாதிக ஹெல உறுமய விரும்பவில்லை என்ற போதிலும், கிழக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையில் அதற்கு விரும்பம் தெரிவித்ததாகவும் எல்லாவள மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: