சட்டத்தரணியும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்த்தருமான மகேஸ்வரி வேலாயுதம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று யாழ்ப்பாணம் கரவெட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற இனம்தெரியாதவர்கள் இவரைச் சுட்டபின் தப்பித்துச் சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுகவீனம் அடைந்துள்ள தனது தாயைப் பார்வையிட தனது சகோதரனுடன் நெல்லியடிக்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இரவு 7.45 அளவில் இராணுவ உடையில் வீட்டை சோதனையிடப் பொவதாக கூறி உள் சென்ற நபர்கள் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்தபின் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
1980களில் ஈழவிடுதலைப் போராட்ட ஆதரவாளராக தன்னை இனம்காட்டிய இவர் பின்னர்; இந்தியாவில் ஈழவிடுதலைக்கு சார்பான அமைப்புக்களில் தன்னை இணைத்து பணிபுரிந்தவர்.
பின்னர் 1995 களின் பிற்பகுதியில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடன் தன்னை இணைத்து அதன் செயலாளர் டக்ளஸ்தேவானந்தாவின் செயலாளராகவும் அமைச்சுக்களில் முக்கிய ஆலோசகராகவும் சட்ட ஆலோசகராகவும் உற்ற தோழியாகவும் தனது வாழ்வை அர்பணித்தவர். என்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, 13 May 2008
மகேஸ்வரி வேலாயுதம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment