Tuesday, 13 May 2008

கிழக்கில் மீண்டும் சிங்கள குடியேற்றம்?

கிழக்கு மாகாணத்தில் மீண்டும் சிங்கள மக்கள் குடியேற்றப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இதேவேளை இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர் சம்பிக்க ரணவக்க, கிழக்கு மாகாண சபைக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கு தமது கட்சி இணக்கம் வெளியிடவில்லை எனக் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் அம்பாறை மாவட்டத்தின் தீகவாவியை அண்மித்த பகுதிகளில் முஸ்லீம் குடியேற்றத்தை எதிர்த்து ஜாதிக ஹெல உறுமய நீதிமன்றம் சென்றுள்ளது.

வரலாற்று பிரசித்தி பெற்ற திகவாபி ராஜமஹா விகாரையில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் 500 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த 500 வீடுகளையும் முஸ்லீம் மக்களுக்கு பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜாதிக ஹெல உறுமய, அந்த வீடுகளை முஸ்லீம் மக்களுக்கு வழங்குவதை இடைநிறுத்துமாறு உத்தரவிட கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று (13-05) அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

ஜாதி ஹெல உறுமய தலைவர் எல்லாவள மேதானந்த தேரர், திகவாபி ராஜமஹாவிகாரையின் விகாரதிபதி நந்தபுராவே புத்தரக்கித்த தேரர், மற்றும் ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

No comments: