Monday, 19 May 2008

காணி, கல்வி அமைச்சுகள் தமிழ் பேசும சமூகத்திற்கு வழங்காமல் புறக்கணிப்பு.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் மூலம் ஜனநாயக நல்லாட்சியை அந்தப் பிராந்திய மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அரசு உறுதி மொழியை வழங்கியிருக்கின்ற போதிலும் மாகாணத்தில் பெரும்பான்மையாக உள்ள தமிழ் பேசும் சமூகங்களுக்கு காணி, கல்வி அமைச்சுப் பொறுப்புகள் கிடைக்காத விதத்தில் அரசு மிக உறுதியுடன் காய்களை நகர்த்தியிருப்பதாக ஆய்வாளர்களும் அவதானிகளும் சுட்டிக்காடடியுள்ளனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சுப் பதவிகள் வழங்கும் விடயத்தில் மஹிந்த கடுமையான நிலைப்பாட்டை எடுத்தே காரியமாற்றியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனா.

முதலைச்சர் நியமானத்தின் போது பிள்ளையான் கல்வி அமைச்சுப் பொறுப்பைக் கேட்ட போதிலும் மஹிந்த அதனை முற்றாக நிராகரித்துள்ளர்ர். அதே சமயம் மஹிந்தவுடன் முரண்பட்டிருக்கும் ஹிஸ்புல்லாவும் காணி, கல்வி அமைச்சுகளை தமக்குத் தரவேண்டுமெனக் கேட்ட போது அவை ஏற்கனவே வழங்கபட்டு விட்டதாகவும் தற்போதைக்கு சுகாதர அமைச்சை ஏற்குமாறு சந்தர்ப்பம் வரும் போது அது குறித்து ஆராயலாமெனக் கூறி விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டார்.

கிழக்கு மாகாணம் தமிழ், முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை பிரதேசமாகும். இந்த மாகாணத்தில் சிங்களவர் மிகச் சிறய சிறுபான்னையினராகும். இந்த நிலையில் இம்மாகாணத்தின் மிக பிரதானமான விடயங்களான காணி, கல்வி விவகாரங்களில் அரசு மிக உன்னிப்பான பார்வையை செலுத்தி செயற்பட்டுள்ளது. இந்த இரண்டு விடயங்களுடன் தொடர்புபட்ட அமைச்சுகளோ பொறுப்புகளோ சிறுபான்மை சமூகங்களின் கைகளுக்குப் போய்விடாமல் காரியமாற்றப்பட்டுள்ளது. இந்த இரண்டு அமைச்சுகளும் சிங்களவரிடமே ஒப்படைக்கப்பட்டள்ளது.

கிழக்கு மாகாண சபை அமைச்சரவையை அமைப்பதற்கு முன்னர் ஹெல உறுமையவுடனும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுடனும் மஹிந்த விரிவாக கலந்துரையாடியிருப்தாகவும் அப்பொது கல்வி, காணி அமைச்சுக்களை தமிழ், முஸ்லிம் சமூகங்களிடம் ஒப்படைப்பதை கூடுமான வரை தவிர்க்குமாறு ஆலோசனை தெரிவிக்கப்டதாகவும் அதன் அடிப்பiயிலேயே இந்த முக்கிய அமைச்சுப் பதவிகளை சிறுபான்மை சமூகத்துக்கு வழங்குவதை மஹிந்த தவிர்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

No comments: