Monday, 19 May 2008

ஜுன் முதலாம் திகதி பிள்ளையான் லண்டன் பயணம்?

பிள்ளையான் தலதா மாளிகைக்கு விஜயம் செய்து ஆசி பெற்றது சிங்களவரது பத்திரிகைகளில் மிகப் பெரிய செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது. ஒரு கொலைகாரக் கோமாளியை கிழக்கின் தலைவராக்கி தமிழினத்தை இழிவு படுத்தி மகிழ்ந்திருக்கும் ராஜபக்சே,

அடுத்தப்படியாக அந்தக் கோமாளியை லண்டனுக்கு அழைத்துச் சென்று, ஈழத்தமிழரின் தலைவர் என்று உலகுக்கு அறிமுகப்படுத்தி தமிழர்களைக் கேவலப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் ஜுன் மாதம் முதலாம் திகதியில் ராஜபக்சே லண்டன் செல்வதற்கான பயண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராஜபக்சே தன்னுடன் பிள்ளையானையும் அழைத்துச் சென்று முக்கிய கூட்டங்களில் பங்கேற்கச் செய்யலாம் என்று உளவுத்துறை அறிவுரைக் கூற, பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அறியப்படுகிறது.

தமிழர்கள் சுத்த முட்டாள்கள் என்று உலகுக்குக் காண்பிக்க பிள்ளையான் சரியான ஆள் என்று கண்டுபிடித்துள்ளனர் இலங்கை உளவுத்துறையினர். இது சரியான திட்டம்தான் என்று அம்பாந்தோட்ட சகோதரர்களும் ஊக்கமளித்துள்ளனர் ராஜபக்சேயின் புதிய முயற்சிக்கு!

தமிழர்களை அவமானப்படுத்த இதைவிடச் சிறந்த வழி ஒன்றினை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றும் பெருமை பேசிக் கொண்டனராம் அந்த சகோதரர்கள்!
thank you:Janarthanan

No comments: