Monday, 19 May 2008

கரு ஜெயசூரியவின் தலையீட்டால் ஹிஸ்புல்லாவின் முடிவில் மாற்றம்


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகி கிழக்கு மாகாண சபையில் தனித்து இயங்கப்போவதாக ஹிஸ்புல்லாஹ் அணி விடுத்திருந்த எச்சரிக்கை கரு ஜெயசூரியவின் தலையீட்டினால் விலக்கிக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஹிஸ்புல்லாஹ் தமது முடிவை அறிவிப்பதற்காக கொழும்பில் நடத்தவிருந்த செய்தியாளர் சந்திப்பை அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலையிட்டு தடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையிலேயே ஹிஸ்புல்லாஹ் மீண்டும் கிழக்கு மாகாண சபையில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப்போவதாக கருத்து வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments: