கொழும்பின் பிரபல ஆங்கில வார இதழான நேசன்பத்திரிகையின் பாதுகாப்பு செய்தியாளர் கேயித் நொயார் இன்று காணாமல் போயுள்ளார்.
அவர் தன்னுடைய அலுவலகத்தில் இருந்து இன்று இரவு 10.30 அளவில் வீடுநோக்கிப் புறப்பட்டவர் வீடு போய் சேரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருடைய வாகணம் அவரது வீட்டிற்கு அருகில் முன்புற விளக்குகளும் இயந்திரம் நிறுத்தப்படாமல் இருக்கவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேசன் பத்திரிகையின் ஆசிரியர் இந்த சம்பவம் குறித்து தெஹிவளை காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த நிலையில் சுதந்திர ஊடக இயக்கம் அவசர அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இரவு வேளையில் காணால் போன கேயித் நொயாரின் உயிரைப் பாதுகாக்க ஊடகசுதந்திரத்திற்காக பாடுபடும் அனைத்து ஊடக நிறுவனங்களும் உடன் நடவடிக்கை எடுக்குமமாறும் இது குறித்து அரசாங்க மட்டத்தில் கடுமையான அழுத்தங்களை கொடுக்குமாறும் வலியுறுத்தி உள்ளது.
அழுத்தம் கொடுக்க வேண்டிய தரப்பினரின் விபரங்களை சுதந்திர ஊடக இயக்கம் அறிவித்துள்ளது.
The president of Sri Lanka : + 94 112447400 ; president@presidentsoffice.lk Secretary to the president ; +94 112 2326309; prsec@presidentsoffice.lk Minister information - + 94 112596557

No comments:
Post a Comment