அண்மை காலங்களாக நடந்து வரும் அதீத
களமுனை மாற்றங்கள் அதன் நகா்வுகள்
ஈழப் போர் நான்ங்கிற்கு கட்டியம் கூறியுள்ளது.
மூன்றாம் கட்ட ஈழப்போரை தொடக்கி வைத்தது
கிழக்கு களமுனை தான். அதே போல அண்மையில்
தாக்கி அழிக்கப்பட்ட படைகாவி கலம் மீதான
நிகழ்வு இதனை தௌpவாக்கியுள்ளது.
சிறு சிறு தாக்குதல்களை தொடுத்து அதன் ஊடாக புலிகளது பலத்தை சிதைக்கலாமென கருதிய படை அதற்கான வலிந்து தாக்குதல்களை மும்முரமாக
நடாத்தி வந்தது.
அதன் விளைவாக சில பிரதேசங்களை கையகப்படுத்தியது அவை தமிழீழ விடுதலைப்புலிகள் தமது படை வலுவை தக்கவைப்பதோடு அதற்குள் படைகளை வரவிட்டு தாக்கி அழிக்கின்ற நிலையான நிலையோடு அதனை
செய்திருந்தனர்.
அதனை தனக்கு சாதகமாக்கிய அரசு பல வெற்றிவிழாக்களை கொண்டாடியது. அவை நிலைக்கவல்லாதவை என தெரிந்திருந்தும் நிலையானவை என பரப்புரை செய்தது.
தற்பொழுது அந்த நிலை மாறி புலிகள் எங்கே எப்போது உடைப்பெடுப்பார்கள் தாக்குவார்கள் என்ற ஜய நிலை படைகளிற்கும் படை தலைமைக்கும் தோற்றுவித்தள்ளது.
தற்காப்பு யுத்தத்தை நடாத்தியவாறு நீண்டதொரு மரபு நில மீட்பு போருக்கு புலிகள் தயாராகியதை படைகள் அறிந்திருக்கவில்லை போலும். அந்த கால கட்டம் தற்போது செயலுரு பெற தொடங்கிவிட்டது.
நடந்து முடிந்த தோ்தலும் அதன் குழப்பங்களும் புலிகளிற்கு பெரும் தலையிடியையும் அதேவேளை அந்த மண்ணை மீட்கின்ற அல்லது தமது ஆளுகைக்குள் வைத்திருக்க வேண்டிய கட்டாய தேவை ஏற்ப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு இணைந்ததொரு அமைவே தமிழீழம் என்பதும் அதிலொரு பகுதி பிரித்தறுத்து வடக்கு குழு கிழக்கு குழு என அரசு பிரித்தாழ முனையும்போது
புலிகள் என்ன மாங்காயா பறிப்பார்கள்...?
இதுவரை காத்திருந்த அமைதி இனி புயலென மாறப்போகிறது. ஏக காலத்தில் தரை கடல் வான் என தாக்குதல்கள் விரிந்து செல்கிறது. இவையாவும்
வௌ்ளோட்டம் விடப்பட்டவை என்பது புலிகளது மௌனத்திலிருந்து ஊகித்து கொள்ள முடியும்.
கிழகில் தாம் அல்லாத மாற்று குழு அங்கு அரச துணையுடன் ஒரு பொம்மையாட்சி செய்ய ஒரு போதும் புலிகள் அனுமதிக்க மாட்டார்கள்.
அப்படியானால் புலிகள் எங்கோ ஏதோ ஒரு முனையால் கதவை திறக்க போகிறார்கள் என்பது தௌவாகிறது அவை கிழக்கு அல்லது வடக்காக இருக்கலாம்.
இங்கே முக்கிய பிளவாக அமைவது கிழக்கு அங்குதான் இன சிக்கல் உச்சத்தில் உள்ளது. ஆனால் ஏக காலத்தில் இரு முனைகள் ஊடாகவும் தாக்குல் தொடுக்கலாமென எதிர்பாக்கப்படுகிறது.
அவை வடக்கு கிழக்கு சார்ந்திராது பரந்து விரிந்த தாக்குதலாக இலங்கையை உலுப்ப போகிறது. அடி மேல் அடி அரசிற்கு விழப்போகிறது.
இது வெறுமென இராணுவ வெற்றி மட்டுமல்லாது அரசியல். பொருளாதாரத்திலும் ஆட்டம் காண வைக்கப்போகிறது.புலிகளது உள் கட்டுமானங்களை சிதைத்து அழிப்பதன் ஊடாக அந்த விடுதலையை
நசுக்கி விடலாமென கங்கனம் கட்டிய இனவாத சிங்களத்திற்கு நல்ல பதில் சொல்ல வேண்டிய காலம் நெருங்கிவிட்டது.
கிழக்கு தோ்தலை வைத்து புலிகளை ஓரம்கட்டி தான் ஆதாயம் தேட விளைகிற இனவாத சிங்களத்திற்கு புலிகள் பெரும் பதிலடி கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம்
எழுந்துள்ளது.
இது கால மாற்றம். அண்மைகாலங்கள் தொடராக விடுதலை புலிகளது இதய பூமியான வன்னி பகுதி மீது தொடராய் விமானப்படைகளால் நடாத்தப்படும்
தாக்குதல்கள் மூலம் பல விடயங்களை அவதானிக்க முடியும்.
இதனை இலங்கை படைகள் ஏன் செய்கின்றன என்பது புலிகளிற்கும் தெரியும். ஆம் இருள் கலைகிறது விடியல் பிறக்கிறது. புலிகள் பாய்வதற்கு தயாராகி
விட்டா்கள்.
-வன்னி மைந்தன்-
கலகத்திலிருந்து பெறப்பட்டது
Monday, 12 May 2008
பாய தயாராகும் புலிகள்--வன்னி மைந்தன்-
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Varatharajaperumal-ur attention please-vacate & give room for Mahindha&company @ ur "halting" Place!
Post a Comment