இந்தியாவின் ஐ.டி.தலைநகராக சென்னை மாறத் தொடங்கி இருக்கிறது. இதுநாள் வரை சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டு வரும் பெங்களூரூக்குப் போட்டியாக சென்னை களம் இற்ங்கி இருக்கிறது. அதற்கான எல்லா கட்டமைப்பு வசதிகளுடன் சென்னை திகழ ஆரம்பித்துவிட்டது.
இந்தியாவில் உள்ள 10 முன்னணி ஐ.டி.ஏற்றுமதி நிறுவனங்களில் 6 நிறுவனங்கள் சென்னையில் செயல்படுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் ஐ.டி.நிறுவனங்கள் இல்லை. விப்ரோ, டிசிஎஸ், காக்னிசன்ட், இன்போசிஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான நிபுணர்களுடன் தனது தொழிலை சென்னையில் நடத்தி வருகிறது.
மேலும் மின்ட்ரி, போலாரைஸ், பாட்னி,ஹெக்ஸாவேர்,டெக் மஹேந்திரா போன்ற நிறுவனங்கள் சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் தனது வியாபார எல்லை நீட்டித்துக் கொண்டே போகிறது.
இந்தியாவிம் மிகப் பெரிய ஐ.டி.ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ், மும்பையை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. ஆனால் அதன் மிகப் பெரிய தயாரிப்பு பணிகள் எல்லாம்சென்னையில்தான் நடைபெறுகிறது.
"சென்னையில் மட்டும் எங்களுக்கு 6 நிறுவனங்கள் உள்ளன. இதில் 23 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். சென்னை நகரில் இதுவரை நாங்கள்தான் முன்னணியில் இருக்கிறோம். இன்னும் சிலமாதங்களில் சிறுசேரியில் 70 ஏக்கர் பரப்பளவில் 21 ஆயிரம் பணியாளர்களுடன் எங்களின் பணியைத் தொடங்க இருக்கிறோம்" என்கிறார் டிசிஎஸ்-இன் செய்தித் தொடர்பாளர்.
உலகத்தின் மிகப்பெரிய எண்ணிக்கையிலான ஐடி நிபுணர்களைக் கொண்ட நகரமாக விளங்க இருக்கும் சென்னை நகரில் மஹேந்திரா நிறுவனம் 25 ஆயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ளது.
விப்ரோ நிறுவனத்தில் மொத்தம் 75 ஆயிரம் பணிடங்கள் உள்ளன.இதில் சென்னையில் மட்டும் 10 ஆயிரம் பணியாளர்கள் இருப்பதாகக் கூறுகிறார் அந்நிறுவனத்தின் சென்னை பொறுப்பாளார். இந்த எண்ணிக்கை பிபிஓ பணிகளை சேர்க்காதது. இன்னும் 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 35 ஆயிரமாக்க திட்டமிட்டுள்ளது விப்ரோ .
இதே சம அளவு எண்ணிக்கையில் செயல்படுகிறது காக்னிஸன்ட் நிறுவனம். உலக அளவில் தனது நிறுவனத்தின் பணிகளில் 40% -யை சென்னையில் நடத்திக் கொண்டிருக்கிறது. உலகமுழுவதும்ள்ள 55 ஆயிரம் பணியாளர்களில் சென்னை மற்றும் கோவையில் மட்டும் 22 ஆயிரம் பணியாளர்களை காக்னிஸன்ட் கொண்டுள்ளது.
சத்யம் நிறுவனத்தில் மட்டும் 9 ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.இன்னும் இரண்டு ஆண்டுகளில் 6 ஆயிரம் பேரை பணியமர்த்த உள்ளது.
சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழில் செய்ய 37 நிறுவனங்கள் அரசிடம் அனுமதி கோரி உள்ளது. இது தவிர தனியார் கட்டுமான நிறுவனங்களும் 5 வருடங்களில் இதில் தீவிரமாக இறங்க உள்ளது. இதுவரை 11 ஐடி பூங்காக்களை அரசு சார்பில் அமைத்துள்ளனர். இன்னும் 220 ஐடி பூஙாக்களை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது ஐடி பூங்காகளுக்காக மட்டும் 73 ஆயிரம் சதுர அடியை தமிழக அரசாங்கம் ஒதுக்கி இருக்கிறது.
No comments:
Post a Comment