Saturday, 3 May 2008

பாடப்புத்தகங்களை அச்சிடும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது

அச்சகத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை கல்வி அமைச்சு உரிய முறையில் வழங்காமையினால் பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் 20 லட்சம் பாடசாலை பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி தடைப்பட்டுள்ளதாக ராவய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

2008ம் ஆண்டுக்கான 68 வகையான பாடப்புத்தகங்கள் அச்சிடுவதற்காக பணிகள் ரத்மலானை விஸ்வலேகா அச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 52 வகையான புத்தகங்களை அச்சிட்டு கல்வி அமைச்சிடம் குறித்த அச்சகம் வழங்கியுள்ளது. எனினும், இந்த 52 வகையான புத்தகங்களை அச்சிடுவதற்கான 1800 லட்ச ரூபா பணத்தை கல்வியமைச்சு இதுவரையில் செலுத்தவில்லை.

இதனால் ஏனைய 16 வகையான புத்தகங்களை அச்சிடும் பணிகளை குறித்த அச்சகம் இடைநிறுத்தியுள்ளது.

புத்தகங்கள் முழுவதையும் அச்சிடுவதற்கு சுமார் 3000 லட்ச ரூபா செலவாகும் என விஸ்வலேகா அச்சக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், அரசாங்கம் உரிய வகையில் பணம் செலுத்தாமையினால் குறித்த பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த மொத்த பணத்தில் 40 வீதமான 1200 லட்ச ரூபாவை அரசாங்கம் செலுத்தியுள்ளதாகவும், இதனால் பணி நிறைவடைந்தவுடன் முழுப்பணமும் செலுத்தப்படும் எனவும் அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: