Saturday, 3 May 2008

புலிகளுடன் பேச ராஜதந்திர நடவடிக்கை.

நோர்வே, சுவிடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளின் அழுத்தங்களின் ஊடாக விடுதலைப்புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வரும் ‘ராஜதந்திர நடவடிக்கை’ ஒன்றை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப்புலிகள் தொடர்பில் அந்த நாடுகள் கொண்டுள்ள எண்ணைத்தையும், புலிகளின் படைநடவடிக்கைகள் குறித்து இந்த நாடுகள் கொண்டுள்ள எண்ணப்பாடுகளின் மாற்றங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் இதன் ஊடாக மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக அமைச்சர் ராஜித சேனாரட்ன தலைமையிலான தூதுகுழுவினர், நோர்வே, டென்மார்க் மற்றும் சுவிடன் உட்பட வட ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் கொண்டுள்ள நிலைப்பாட்டை மீளாய்வு செய்ய நோர்வேயின் சமாதான தரகர்கள் விரும்பம் தெரிவித்ததனால், இந்த ராஜதந்திர முயற்சிகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன சிங்கள வார இதழுக்கு தெரிவித்துள்ளார்.

No comments: