வெசாக் தினத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் நடத்துவதற்கு புலிகள் முயற்சிக்கலாமென இராணுவத் தலைமையகம் எச்சரித்துள்ளது. இது தொடர்பான எச்சரிக்கை இராணுவ தலைமையகத்திடமிருந்து கிடைக்கப்பெற்றிருப்பதாக தகவல் திணைக்களத் தலைவர் அனுஷா பெல்பிட்டிய கூறியுள்ளார்.
“பொதுமக்கள் கூடும் இடங்களில் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி அதன்மூலம் கூடுதல் சேதங்களையும் ஏற்படுத்த முடியும்” என சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
நகரங்கள், சந்திகள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்கள் பெருமளவில் ஒன்றுகூடும் இடங்களில் அவர்களின் ஒன்றுகூடுலை ஊக்குவிக்க வேண்டாமென பாதுகாப்புத் தரப்பினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை, கடந்த 15ஆம் திகதி முதல் 11 நாட்கள் விசேட பாதுகாப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்பு ஊடக நிலையம் அறிவித்துள்ளது. வெசாக் தினத்தை முன்னிட்டு தாக்குதல்கள் நடத்தப்படலாமென எதிர்பார்த்தே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக அந்த நிலையம் அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் தென்பகுதியில் தாக்குதல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இராணுவம் எச்சரித்துள்ளது என கொழும்பு ஆங்கில ஊடகமொன்று மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment