Friday, 23 May 2008

மட்டக்களப்பில் முஸ்லிம் ஜிகாத் ஆயுதக் குழுவினரை வெளியேறுமாறு பிள்ளையான் குழு உத்தரவு.

மட்டக்களப்பில் முஸ்லிம் ஜிகாத் ஆயுதக் குழுவினரை வெளியேறுமாறு பிள்ளையான் குழு உத்தரவு கொடுத்து வருவதாக அறியமுடிகிறது.

பிள்ளையான் குழுவினருக்கும் காத்தான்குடி முஸ்லிம் ஜிகாத் ஆயுதக் குழுவினர்ளுக்குமிடையே ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து சுமார் 100க்கும் மேற்பட்ட ஜிகாத் ஆயுதக் குழுவினருடன் தொடர்புடைய முஸ்லிம் வர்த்தகர்கள் மட்டக்களப்பில் வைத்து பிள்ளையான் குழுவினரால் மிக மோசமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

இன்று மாலை 2 மணியளவில் மட்டக்களப்பு நகரில் ஜிகாத் ஆயுதக் குழுவினருடன் தொடர்புடைய வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்களுக்குட்புகுந்த பிள்ளையான் குழுவினர் அங்கிருந்த ஜிகாத் ஆயுதக் குழுவினருடன் தொடர்புடைய முஸ்லிம் வர்த்தகர்களை மிக மோசமாகத் தாக்கியுள்ளதுடன் அவர்களை ஓட ஓட வீதிகளில் விரட்டிச் சென்றும் தாக்கியுள்ளனர்.

கொட்டன்களாலும், தடிகளாலும் மற்றும் பைப்புக்களாலும் மிகமோசமான தாக்குதல்களுக்குள்ளான முஸ்லிம் வர்த்தகர்கள் அல்லா..அல்லா என்று கத்தியவாறு நகர மத்தியிலுள்ள பள்ளிவாசலை நோக்கி ஒடிச்சென்றதை காணக்கூடியதாகவிருந்தது.

பிள்ளையான் குழுவினரின் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலைத் தொடர்ந்து அங்கு வந்த பொலிஸார் தமிழ் மக்களுடைய கடைகளையும் ப+ட்டிவிட்டு வீடுகளுக்குச் செல்லுமாறு பணித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இன்று மாலையளவிலே மட்டக்களப்பு நகரம் சனசந்தடியற்று அமைதியடைந்தது. தற்பொழுது இங்கு மயான அமைதி ஒன்று நிலவி வருகின்றது.

sorce:nitharsanam.com

No comments: