Friday, 23 May 2008

ஜே.வி.பிக்கு இதுவரையில் கிடைக்கப் பெற்ற வெளிநாட்டு நிதியுதவி ரத்து

ஜே.வி.பியின் அரசியல் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் குழுவினரால் வழங்கப்பட்டு வந்த உதவிகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது

விமல் வீரவன்ச தலைமையிலான ஜே.என்.பிக்கு இனிமேல் நிதியுதவிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக அந்த அமைப்பு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது ஜப்பான் குழுவின் பிரதான அமைப்பாளர் சமன்பிரியங்கரவினால் எழுத்துமூலம் இந்த உறுதிமொழி ஜே.என்.பிக்கு வழங்கப்படவுள்ளது.

ஜே.வி;;பியிலிருந்து விமல் வீரவன்ச நீக்கப்பட்டமை மற்றும் தமது தமது அமைப்பினால் வழங்கப்படும் நிதியுதவி குறித்தும் எதுவும் தெரியாதென ஜே.வி.பி தெரிவித்துள்ளமை போன்ற சம்பவங்கள் மிகவும் வேதனையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஜே.வி.பிக்குள் ஏற்ப்பட்ட உட்கட்சி ப10சலை சுமூகமான முறையில் தீர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை

எனவும் அதற்கு மாறாக கட்சி;த் தலைமை கடுமையான போக்கைப் பின்பற்றியதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார் தலைமைத்துவத்தில் காணப்படும் குறைபாடுகளினால் ஜே.வி.பி பாரிய பின்னடைவைச் சந்திக்கும் எனவும் புதிய அரசியல் பிரவாகமொன்றில் தேவைப்பாடு விஞ்சி நிற்பதாகவும் ஜப்பான் குழுவின் பிரதான அமைப்பாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.

No comments: