கனகராயன்குளம் கனகராயன்குளக் கோட்ட மே நாள் நிகழ்வு கனகராயன் குளக்கோட்ட முத்தமிழ் மன்றச் செயலாளர் பார்த்தீபன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை வவுனியா மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணிப்பாளர் மூர்த்தி ஏற்றினார். தமிழீழ தேசியக் கொடியினை கனகராயன்குளக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஞானவேல் ஏற்றினார். கனகராயன்குளக்கோட்ட முத்தமிழ் மன்றச் செயலாளர் பார்த்தீபன், நெடுங்கேணிக் கோட்ட கல்வி அதிகாரி விநாயகமூர்த்தி, மாவட்ட அபிவிருத்தி நிறுவன இணைப்பாளர் சுகுமார் ஆகியோர் மே நாள் உரைகளை நிகழ்த்தினர். போராளி தமிழ்க்கவி சிறப்புரையாற்றினார். மே நாள் பிரகடனத்தை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை சேர்ந்த புவனேஸ்வரி வாசித்தார். ஒட்டுசுட்டான் ஒட்டுசுட்டான் நெடுங்கேணிக் கோட்டத்தில் மே நாள் நிகழ்வுப் பேரணி ஒட்டடுசுட்டான் சந்தியில் இருந்து தொடங்கியது. புனித பூமி சிறார்களின் இசையுடன் வணிகர்கள்- விவசாயிகள்- தொழிலாளர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். நிகழ்வுக்கு கற்சிலைமடு அ.த.க. பாடசாலை முதல்வர் நாகேந்திரராசா தலைமை வகித்தார். பொதுச்சுடரினை வவுனியா வடக்கு பொது முகாமையாளர் ஏற்ற தமிழீழ தேசியக் கொடியினை ஒட்டுசுட்டான் நெடுங்கேணிக் கோட்டப் பொறுப்பாளர் ஞானம் ஏற்றினார். தேசிய பணிக்குழுச் செயலாளர் குமாரலிங்கம், சித்த ஆயுர்வேத மருத்துவர் வன்னியசிங்கம், பாடசாலை முதல்வர் பன்னீர்ச்செல்வம், நெடுங்கேணி ஒட்டுசுட்டான் கோட்டப்பொறுப்பாளர் ஞானம் ஆகியோர் கருத்துரையாற்றினர். ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய முதல்வர் சிறப்புரையாற்றினார். மே நாள் பிரகடன அறிக்கையை பாடசாலை முதல்வர் வாசித்தார். வட்டக்கச்சி வட்டக்கச்சிக் கோட்டத்தில் இராமநாதபுரம் தேசிய பணிக்குழு தலைவர் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை கிராம அலுவலகர் தண்டாயுதபாணி ஏற்றினார். தமிழீழ தேசியக் கொடியினை வட்டக்கச்சி கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சின்ணண்ணா ஏற்றினார். வட்டக்கச்சி மகாவித்தியாலய முதல்வர், இராமநாதபுரம் மகாவித்தியாலய மாணவர் ஆதித்தன், விவசாயிகள் சார்பில் இளங்குமரன் ஆகியோர் மே நாள் உரையாற்றினர். விடுதலைப் புலிகள் ஏட்டின் முதன்மை ஆசிரியர் ரவி சிறப்புரையாற்றினார். புதுக்குடியிருப்பு புதுக்குடியிருப்புக் கோட்ட பொதுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தைச் சேர்ந்த அன்னலிங்கம் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து ஆசிரியர் ஏகாம்பரம், முல்லை வலய உதவிக் கல்விப்பணிப்பாளர் தியாகராசா ஆகியோர் கருத்துரையாற்றினர். புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் தமிழன்பன் தனது சிறப்புரையில், "சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் முற்றுகைக்குள்ளும் சளைக்காமல் நின்று கொண்டு தமது தொழில்களையும் கவனித்துக்கொண்டு தமது உழைப்பின் நிமித்தம் இந்த விடுதலைப் போராட்டத்தையும் வளர்த்து வருகின்ற தன்மை எங்களால் மட்டும் தான் செய்யமுடியும். இன்று உலகின் மத்தியில் நாங்கள் ஒரு நியாயமான ஒரு போரைச் செய்து கொண்டிருக்கின்றோம். இந்த மக்களுக்கான ஒரு போராட்ட அமைப்பாக நாங்கள் இன்று நிமிர்ந்து நிற்கின்றோம்" என்றார் அவர். அதன் பின்னர் புதுக்குடியிருப்புச் சந்தியில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் கொடும்பாவி எரியூட்டப்பட்து. விசுவமடு விசுவமடுக் கோட்டத்தில் தர்மபுரம் சாலையில் இருந்து மே நாள் கண்டனப்பேரணி தொடங்கி நிகழ்விடத்துக்குச் சென்றது. நிகழ்வுக்கு விசுவமடுக் கோட்ட பொதுமக்கள் ஒன்றியத் தலைவர் புஸ்பராசா தலைமை வகித்தார். பொதுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் விசுவமடு காவல்துறைப் பிரிவுப் பணிப்பாளர் ரகு ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை விசுவமடுக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சீராளன் ஏற்றினார். கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை சிறப்புரையாற்றினார். முழங்காவில் முழங்காவிலில் அதன் கோட்ட தேசிய பணிக்குழுச் செயலாளர் ஈழத்தமிழ் மணி தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. பொதுச்சுடரினை முழங்காவில் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் குயிலின்பன் ஏற்ற, தமிழீழ தேசியக்கொடியினை கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட கடற்புலிகள் அரசியல்துறைப் பொறுப்பாளர் அண்ணாத்துரை ஏற்றினார். பூநகரிப் பிரதேச கடற்தொழிலாளர் சமாச தலைவர், ஜெயபுரம் பங்குத் தந்தை பெண்கள் மேம்பாட்டுக்குழுத் தலைவி ஆகியோர் கருத்துரையாற்றினர். அரசியல்துறையின் பெண்கள் திட்டமிடலுக்கும் மேம்பாட்டுக்குமான பொறுப்பாளர் தமிழினி சிறப்புரையாற்றினார். நவம் அறிவுக்கூடம் லெப்.கேணல் நவம் அறிவுக்கூடத்தில் போராளி ஈழமைந்தன் தலைமையில் மே நாள் நிகழ்வு நடைபெற்றது. பொதுச்சுடரினை விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் ஏற்ற, தமிழீழத் தேசியக் கொடியினை பொறுப்பாளர் தேவன் ஏற்றினார். ஈகைச்சுடரினை பணியாளர் ஆனந்தராசா ஏற்ற, மலர்மாலையினை பணியாளர் பாப்பா சூட்டினார். விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் சிறப்புரை நிகழ்த்தினார். போட்டிகள் நடத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டன.
அக்கராயன்
அக்கராயன் கோட்ட பொதுமக்கள் அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வுக்கு அக்கராயன் கோட்ட கல்விக்கழகப் பொறுப்பாளர் தீபன் தலைமை வகித்தார். பொதுச்சுடரினை கமக்கார அமைப்பின் தலைவர் அருணாசலம் ஏற்ற, தமிழீழத் தேசியக் கொடியினை அக்கராயன் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் பரஞ்சோதி ஏற்றினார். அரசியல் ஆய்வு மையப் பொறுப்பாளர் கவியழகன் சிறப்புரையாற்றினார். தமிழர் புனர்வாழ்வுக் கழக கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், வன்னேரிக்குளம் கிராம அலுவலர் சபாரத்தினம் ஆகியோர் கருத்துரையாற்றினர். மல்லாவி மல்லாவிக் கோட்டத்தில் தேசியப் பணிக்குழுவின் ஏற்பாட்டில் தொழிலாளர் நாள் நிகழ்வு யோகபுரம் மகாவித்தியாலாய முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பொதுச்சுடரினை மாவீரர் குமுதனின் உடன்பிறப்பு ஏற்ற, தமிழீழ தேசியக் கொடியினை மல்லாவிக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் செம்மணண் ஏற்றினார். துணுக்காய் கூட்டுறவுச்சங்கப் பணியாளர் பத்மநாதன், மல்லாவி வணிகர் சங்க உறுப்பினர் விஜயலட்சுமி, மல்லாவி தேசிய பணிக்குழு உறுப்பினர் தனிநாயகம் ஆகியோர் கருத்துரையாற்றினர். மே நாள் கண்டன அறிக்கையை தேசியப் பணிக்குழு உறுப்பினர் யேசுதானந்தன் வாசித்தார். தமிழீழ கொள்கை முன்னெடுப்புப் பிரிவுப் பொறுப்பாளர் சி.எழிலன் சிறப்புரையாற்றினார். முள்ளியவளை முள்ளியவளைக் கோட்டத்தில் நடைபெற்ற மே நாள் நிகழ்வுக்கு முள்ளியவளை வணிகர் சங்கத் தலைவர் தேவசராசா தலைமை வகித்தார். பொதுச்சுடரினை முல்லைத்தீவு பங்குத் தந்தை ஜேம்ஸ் பத்திநாதன், இந்து மதகுரு ரகுநாதன், முஸ்லிம் மதகுரு முத்து முகமது ஆகியோர் ஏற்றினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன், கரைத்துறைப் பற்று கோட்டக்கல்வி அதிகாரி ஆகியோர் கருத்துரையாற்றினர். மே நாள் பிரகடன அறிக்கையை வர்த்தக சங்கத் தலைவர் மனோகரன் வாசித்தார்.
|
No comments:
Post a Comment