Wednesday, 14 May 2008

கருணா வருகைதந்தால் சட்டமே பதிலளிக்கும் அரசாங்கம் அறிவிப்பு

பிரிட்டன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) நாட்டிற்கு வருகைதந்தால் சட்டமே பதிலளிக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

கருணா விடயத்தை பிரிட்டிஷ் பொலிஸாரும் அரசாங்கமும் மேற்கொண்டுவருகின்றனர் இந்நிலையில் அவர் நாட்டிற்கு வருகைதந்தல் நாட்டிலுள்ள சட்டத்திட்டங்களில் பிரகாரம் பதிலளிக்கப்படும் அந்த சட்டம் தொடர்பாக எனக்கு தெரியாது என்று அமைச்சரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் செய்தியாளர் கேட்டகேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரிட்டனிலிருந்து கருணா நாடு கடத்தப்படால் அவரை விமான நிலையத்தில் வைத்து அரசாங்கம் கைதுசெய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதா? என்ற கேள்விக்கே அமைச்சர் மேற்கண்டவாறு பதலளித்தார். கருணா விடயத்தை பிரிட்டிஷ் அரசாங்கமும் பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் அவர் நாடு கடத்தப்படுகின்ற போது சட்டம் பதிலளிக்கும் என்றும் அவர் கூறினார்.

No comments: