கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர் தேசியப் பட்டியல் மூலம் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்படவுள்ளதாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடும் பொருட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தவிசாளர் பசீர் சேகுதாவூத் மற்றும் ஹசன் அலி ஆகியோர் கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.
எதிர்வரும் ஜூன் மாதம் 5ம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமானதன் பின்னர் இவர்கள் பதவிப்பிரமானம் செய்து கொள்வார்கள் எனத் தெரியவருகிறது.
இதேவேளை, மாகாணசபை உறுப்பினர் பதவிகளை அவர்கள் இராஜினாமா செய்ய உள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
Wednesday, 14 May 2008
ஹக்கீம், சேகுதாவூத் ஆகியோர் தேசியப் பட்டியல் மூலம் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment