
வவுனியா மாவட்டத்தில் உள்ள கூமாங்குளத்தில் நேற்று இரவு குடும்பஸ்தர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சுட்டுக்கொல்லப்பட்டவரின் உடலம் இன்று காலை வவுனியா காவல்துறையினரால் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையிலும் கண்கள் கட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்ட இந்த உடலம் மன்னாரை சேர்ந்த 48 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவருடையது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கூமாங்குளம் பகுதியில் நேற்றிரவு 10:30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் அந்தச் சமயத்திலேயே இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
உடலம் கிடந்த இடத்தில் கிடந்த வெற்றுத் தோட்டாக்கள் சிலவும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment