Sunday, 25 May 2008

தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் கூட்டத்தில் குழப்பம்

தீவிர சிங்கள – பௌத்த இனவாத அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி நேற்று ஞாயிற்றுக்கிழமை பொரளையில் உள்ள அதன் தலைமையகத்தில் நடத்திய அதன் நிறைவேற்றுக்குழுவின் கூட்டம் குழப்பத்தில் முடிவடைந்ததாக அறிவிக்கப் படுகின்றது.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கதினர் நேற்று நடத்திய தேசிய நிறைவேற்று சபை கூட்டத்திற்;குள் அழைப்பின்றி பிரவேசித்த தம்பர அமில தேரர் உள்ளிட்ட ஜே.வீ.பீயினர், கூட்டத்தை சீர்குலைக்க முயன்றதாகவும் இதனை காவல்துறையினர் தலையிட்டு தீர்த்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


நேற்று பிற்பகல் 2 மணியளவில் கொழும்பு கொட்டா வீதியில் உள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


இதன் போது இங்கு சென்ற தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரர் இது உண்மையான நிறைவேற்று சபை கூட்டம் அல்ல எனவும் இந்த கூட்டத்திற்கு விமல் வீரவன்ஸவுடன் பிரிந்து சென்ற ஆதரவாளர்களுக்கு மாத்திரம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு பிரவேசித்து அதனை சீர்குலைக்க முயன்றுள்ளார்.


இதனையடுத்து தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் சோனரத்ன டீ சில்வா பெரல்iலை காவல்துறையினருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமது அலுவலகத்தில் சச்சரவு ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினரை அங்கு வருமாறு அழைத்துள்ளார்.


அதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் ஜே.வீ.பீயினரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். இந்த நிலையில் அங்கிருந்து வெளியேறி சென்ற தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரர் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். விமல் வீரவன்ஸ உள்ளிட்டவர்கள் ஜே.வீ.பீயில் இருந்து விலகிய பின்னர் அவர்கள் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் நோக்கத்தை சிதறடிக்க முனைவதாக அவர் குற்றம்சுமத்தினார்.


எவ்வாறாயினும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் ஜே.வீ.பீயின் கைபாவை அமைப்பாக இருந்ததுடன் விமல் வீரவன்ஸ அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார்.


இந்த நிலையில் விமல் வீரவன்ஸ ஜே.வீ.பீயில் இருந்து விலகி தேசிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை உருவாக்கியதை அடுத்து, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கதின் பெருபாலானோர் அந்த கட்சிக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.


இந்த நிலையில் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று உரையாற்றிய தம்பர அமில தேரர் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தை கஞ்சா குழுவின் நோக்கத்திற்கு பயன்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.


தேசிய நிறைவேற்று சபையின் பெருபாலான உறுப்பினர்கள் தம்மிடமே உள்ளதாகவும் விரைவில் தேசிய பற்றுள்ள தேசிய இயக்கத்தை தேசிய மாநாட்டை நடத்தி, அமைப்பின் ஆரம்ப நோக்கிக்கான முனைப்புகளை மேற்கொள்ள பேவதாகவும் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

No comments: