இலங்கை இராணுவத்தினர், பொலிஸார் யாழ் மாவட்ட செயலகம் ஆகியன இணைந்து எதிர்வரும் 23ஆம், 24ஆம் திகதிகளில் யாழ்ப்பாண களியாட்டம் 2008 (carnival) நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன.
யாழ் குடாநாட்டு மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இசை நிகழ்ச்சிகள், களியாட்டங்கள், மலிவுவிற்பனைகள் போன்றன யாழ்ப்பாண களியாட்டம் நிகழ்வில் இடம்பெறவிருப்பதாக சுவரொட்டிகள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.
மலிவுவிற்பனையில் அனைத்துப் பொருள்களையும் விற்பனை செய்ய முன்வருமாறு ஏற்பாட்டாளர்கள் யாழ் வர்த்தக சங்கத்தினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். எதிர்வரும் 23ஆம் 24ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கும் இந்த களியாட்ட நிகழ்வில் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் உட்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருக்குமென சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதனைமுன்னிட்டு யாழ் குடாநாட்;டின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒவ்வொரு இரண்டு மணித்தியாலங்களுக்கும் ஒருதடவை விசேட பேரூந்து சேவை நடத்தப்பட வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் போக்குவரத்துச் சபைக்கு அறிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment