Monday, 26 May 2008

(8th lead)தெஹிவளை பிரதேசத்தில் ரயிலில் குண்டு வெடிப்பு 9 பேர் பலி,14 பேரின் நிலைமை கவலைகிடம் ,73பேர் காயம்



மருதானையிலிருந்து பானந்துறை நோக்கி பயணித்த அலுவலக ரயிலில் குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.
இந்த குண்டு வெடிப்பில் தற்சமயம் 9 பேர் உயிரிழந்துள்ளனர் (4 பேர் பெண்கள்), 14 பேரின் நிலைமை கவலைகிடமாக உள்ளதாக வைத்தியசாலை மருத்துவர்கள் தெரிவித்துளளனர்.

இன்று திங்கட்கிழமை மாலை 4.55 மணியளவில் தெஹிவளையில் நிறுத்தப்பட்டிருந்த தொடரூந்தின் ஐந்தாம் பெட்டியில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இக்குண்டுவெடிப்பினால் காயமடைந்தவர்கள் காயமடைந்த 62 பேர் களுபோவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

மற்றும் ,காயமடைந்தவர்கள் உடனடியாக தெஹிவளை போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர். மோசமான நிலையில் காணப்பட்டவர்கள் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர்.

Tamilwin.com


Tamilwin.com


Tamilwin.com


பிரதேசத்தில் மேலும் பல குண்டுகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பிரதேசத்திற்கு மக்களை செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குண்டுத்தாக்குதல் இடம்பெற்று அரை மணிநேரம் தெஹிவளைச் சந்தியிலிருந்து, வெள்ளவத்தைப் பாலம் வரையிலான பகுதி போக்குவரத்துக்குத் தடைசெய்யப்பட்டிருந்தது. பேரூந்துகளில் பயணித்த பெருமளவானவர்கள் காலி வீதியூடாக நடந்து சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது.

குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து தெஹிவளைப் பகுதியில் சுற்றிவளைப்புத் தேடுதல்களை ஆரம்பித்திருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றைய குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டிருந்த கரையோர புகையிரத சேவைகள் ஒருபகுதி தண்டவாளத்தில் மாத்திரம் இடம்பெறுவதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

கடந்த 1996ஆம் தெஹிவளை புகையிரதநிலையில் புகையிரதத்துக்குள் இடம்பெற்ற குண்டுத்; தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சிமாவட்டம் முறிகண்டிப்பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் வைத்தியசாலைக்குச் சொந்தமான வாகனத்தில் பயணித்த சிறுவர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை தெஹிவளையில் புகையிரதத்துக்குள் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

1 comment:

ttpian said...

avalatthai thanthavanukku,avalatthai thiruppi koduppom