Monday, 12 May 2008

கனேடிய பொலிஸாரின் குற்றச்சாட்டுக்களை உலகத் தமிழர் பேரவையின் ரொரன்ரோ கிளைத் தலைவர் நிராகரித்துள்ளார்

உலகத் தமிழர் பேரவையின் ரொரன்டோ தலைவர் சிற்றம்பலம் சின்னத்தம்பி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டியதாக கனேடிய பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

2004ம் ஆண்டு முதல் உலகத் தமிழர் பேரவையின் ரொரன்டோ கிளைத் தலைவராக சின்னத்தம்பி கடமையாற்றி வருவதாகத் தெரியவருகிறது. தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நீதிமன்றில் போராட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யுத்த நடவடிக்கைகளுக்காக 3 மில்லியன் டொலர்களை வழங்குமாறு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எழுதிய கடிதம் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த அமைப்பிற்கு மாதாந்தம் கிடைக்கப்பெறும் 30,000 முதல் 40,000 வரையிலான கனேடிய டொலர் பணம் புனர்வாழ்வு பணிகளுக்காக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: