Monday, 12 May 2008

விமல்: கொடிய அடிப்படைவாத சிங்கள இனவாத்தின் வடிவம்: ஜே.வீ.பீ:

விமல் வீரவன்ஸவினால் அரசாங்கத்திற்கு முட்டு கொடுக்க மாத்திரமே முடியும் என ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய கட்சியின் மூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு வழங்கவே முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறியுள்ளார்.

விமல் தரப்பினர் தமது புதிய அரசியல் கட்சியினை பதிவு செய்ய விண்ணப்பித்து சில மணிநேரங்களில் இந்த ஊடகவியலாளர் மாநாடு நடத்தப்பட்டது.


விமல் வீரவன்ஸவினால் நிரப்ப கூடிய வெற்றிடம் சமூகத்தில் இல்லை எனவும் அவர்களால் சிறிய இடத்தை மாத்திரமே பூர்த்தி செய்ய முடியும் அதுவும் மிகவும் கொடிய அடிப்படைவாத சிங்கள இனவாதமே எனவும் திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். அது இந்த நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: