Saturday, 10 May 2008

கிழக்கு தேர்தல் குழறுபடிகளின் ஒரு தொகுப்பு(video annex)


கிழக்கின் பல பிரதேசங்களில குறிப்பாக பல வாக்குச்சாவடிகளில் மீழ் வாக்குப் பதிவு நடாத்தப்பட வேண்டும் கோரவுள்ளதாக வன்முறைகள் அற்ற தேரதலுக்கான கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

அம்பாறைப் பிரதேசத்தில் ஆலையடி வேம்பு மற்றும் திருக்கோவில்
பிரதேசங்களிலும் மீழ் தேர்தல் நடத்தப்படவேண்டும் என தாம் தேர்தல் ஆணையாளரிடம் கோரவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வாளைச்சேனை பேத்தாளை விபுலானந்த வித்தியாலையத்தில் பிள்ளையான் வாக்களித்த பின் பிற்பகல் 3.40 அளவில் பலாத்காரமாக புகுந்த பிள்ளையான் குழுவினர்இ வாக்குப்பெட்டியை மூடிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு மோசடிகளில் ஈடுபட்ட 14 வாகனங்களை பொதுமக்கள் அடையாளங் காட்டியுள்ளனர்

மட்டக்களப்பு மாகாணசபைத் தேர்தல்களின் போது வாக்கு மோசடி மற்றும் தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்ட 14 வாகனங்களை குச்சவெளி மற்றும் புதுவக்காடு மக்கள் அடையாளங் காட்டியுள்ளனர்.

குறிப்பிட்ட பஸ் மற்றும் வேன் வண்டிகள் நேற்று நள்ளிரவு முதல் பிரதேசத்தில் சஞ்சரிப்பதாகவும், சில வாகனங்கள் இன்னமும் குறித்த பிரதேசங்களில் சஞ்சரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வாகனங்கள் தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டிருந்த வேளை மக்களால் விரட்டியடிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

குறித்த வாகனங்களின் இலக்கங்கள் பின்வருமாறு:

(WP) PB-0537, 53-8133" ,(WP) G-0880, PA-7991" 58-4858" PA-5389" PX-3372" HM-9787" HJ-6988" HR-9986" JV-6799" JA-3273,HP-3926 yd 53-1139'

இந்த நிலையில் கிழக்கில் தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்துவதில் இருந்து அரசாங்கம் தவறி விட்டதாக ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமாரதிஸ்ஸநாயக்கா தெரிவித்துள்ளார்.

எனினும் மட்டக்களப்பில் எந்த ஒரு பாரிய சம்பவங்களும் இடம்பெறவில்லை எனவும்இ பிள்ளையான் குழுவினர் அடாவடித்தனம் புரியவில்லை எனவும்இ அரசாங்கத்தின் உயர்மட்ட அமைச்சரும் மட்டக்களப்பில் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணித்தவருமான சுசில் பிரேமஜெயந் தெரதிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று தம்பிலுவில் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த 52 ஆவது வாக்குச் சாவடியில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினர் மீண்டும் மீண்டும் வாக்களித்ததாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாக்களித்த பின் பயன்படுத்தப்படும் மையை அளித்தபின் புதிய வாக்குச்சீட்டுக்களை பயன்படுத்தி வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் முஸ்லிம் வாக்களார்கள் அரசாங்க ஆதரவு அடியாட்களினால் மிரட்டப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மூதூர்இ தம்பலகாமம், தோப்பூர், ஜின்னாநகர், அசன்நகர் மற்றும் இரக்கக்கண்டி ஆகிய பிரதேச முஸ்லிம் மக்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

பிரதேசத்தில் பீதியை ஏற்படுத்தி முஸ்லிம்களை அச்சுறுத்துவதன் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைக்கப் பெறும் ஆசனங்களை குறைக்க அரசாங்கம் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்க அமைச்சர்களின் ஆதரவுடன் 200 மேற்பட்ட காடையர்கள் குறித்த பிரதேசங்களில் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக பொலிஸில் தாம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பொலிஸார் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


இன்று பிற்பகல் தக்வாநகர் வாக்குச்சாவடிக்குச் சென்ற அமைச்சர் பாயிஸ் சாக்குப்பெட்டியை உடைக்கப்போவதாக மிரட்டி உள்ளதாக ஐக்கியதேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிகருணநாயக்கா கயந்தகருநாத்திலக ஆகியோரின் வாகனங்கள் திருகோணமலையில் சேதப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: