Saturday, 10 May 2008

திருமலை முஸ்லிம் மக்களின் வாக்குரிமை காடையர்களினால் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது - ரவூப் ஹக்கீம்

அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் அடியாட்களினால் திருகோணமலை மாவட்ட முஸ்லிம் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மூதூர், தம்பலகாமம், தோப்பூர், ஜின்னாநகர், அசன்நகர் மற்றும் இரக்கக்கண்டி ஆகிய பிரதேச முஸ்லிம் மக்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

பிரதேசத்தில் பீதியை ஏற்படுத்தி முஸ்லிம்களை அச்சுறுத்துவதன் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைக்கப் பெறும் ஆசனங்களை குறைக்க அரசாங்கம் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்க அமைச்சர்களின் ஆதரவுடன் 200 மேற்பட்ட காடையர்கள் குறித்த பிரதேசங்களில் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக பொலிஸில் தாம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எனினும், பொலிஸார் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

No comments: