Thursday, 22 May 2008

உப்புகுளம் வடக்கு கிராம சேவகர் பிரிவின் நளவன்வாடி பகுதியை சேர்ந்த வேலாயுதம் பிள்ளை கிருஸ்ணகுமார் கடத்தப்பட்டுள்ளார்

மன்னார் உப்புக்குளம் வடக்கு பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது.

உப்புகுளம் வடக்கு கிராம சேவகர் பிரிவின் நளவன்வாடி பகுதியை சேர்ந்த வேலாயுதம் பிள்ளை கிருஸ்ணகுமார் என்ற 24 வயதான இளைஞனே ஆயுததாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக மன்னார் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற நேற்று மன்தினம் அதிகாலை முதல் மதியம் வரை மன்னார் சாந்திபுரம், நளவன்வாடி, பள்ளிமுனை, பகுதிகளில் இராணுவத்தினர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.


இதன்போது பொது இடமொன்றுக்கு அழைக்கப்பட்ட பிரதேச வாசிகள் தலைக்கவசம் அணிந்த இராணுவக்குழுவினரால் பலவந்தமாக ஒளிப்பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.

கடத்திச் செல்லப்பட்ட குறித்த இளைஞனும் அன்றைய தினம் ஒளிப்பதிவு செய்யப்பட்டதாகவும் இதனையடுத்து இளைஞன் மேலதிக விசாரணைக்காக மன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணையின் பின்னார் நேற்று (21) விடுவிக்கப்பட்டுள்ளார்.

விட்டிற்குச் சென்ற முகமூடி அனிந்த ஆயுதம் தாங்கிய குழுவினர் யன்னல் வழியாக குறித்த இளைஞனின் பெயரைக்கூறி அழைத்து பின் அவரை ஆயுத முனையில் அழைத்துச் சென்றுள்ளதாக இளைஞனின் தாய் மன்னார் காவல்துறை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: