Thursday, 22 May 2008

போலி இரகசியப் பொலீசார் காவற்துறையினரால் கைது

இரகசிய பொலிஸார் என்ற போர்வையில் தமிழர்களிடம் நகைகளையும், பணத்தையும் கொள்ளையிட்ட குழு ஒன்றை வெள்ளவத்தை காவற்துறை கைது செய்துள்ளது.

இரகசிய பொலிஸார் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு சோதனை மற்றும் விசாரணைகள் என்ற போர்வையில் தமிழர்களின் ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

மொரட்டுவை மற்றும் நாரஹேன்பிட்டி ஆகிய பிரதேசங்களில் வசிப்போரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த தமிழர்களிடமிருந்து சுமார் 25 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளதாகத் தெரியவருகிறது.

இவ்வாறு கொள்ளையிடப்பட்ட பணத்தில் கொள்ளைக் குழு; உல்லாச வாழ்க்கை வாழ்வதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

No comments: