|  ஹிஸ்புல்லா தரப்பு மாகாணசபை உறுப்பினர் ஒருவரை அரசாங்கத் தரப்பிற்கு இழுப்பதற்கான முயற்சிகளில் ஜனாதிபதியின் சகோதரர் பெசில் ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. | 
| ஹிஸ்புல்லாஹ் தரப்பு மாகாணசபை உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சுப் பதவியொன்றை வழங்கி அதன் மூலம் அரசாங்கத்திற்கு ஆதரவு பெற்றுக் கொள்ள முயற்சிக்கப்படுவதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் தெரிவு செய்யப்பட்ட ஹிஸ்புல்லா தரப்பு உறுப்பினர்கள் தனித்து செயற்பட போவதாக அறிவித்த காரணத்தினால் கிழக்கு மாகாணசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதில் ஆளுங்கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. ஹிஸ்புல்லா தரப்பு தனித்து இயங்குவதாக அறிவித்ததனைத் தொடர்ந்து ஆசனங்களின் எண்ணிக்கை 17 ஆக குறைவடைந்துள்ளது. இந்த நிலைமையின் கீழ் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கு இன்னமும் ஒரு ஆசனம் தேவைப்படுகின்றது. இதன் காரணமாக ஹிஸ்புல்லா தரப்பு உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்கள் ஆகியோருடன் பெசில் ராஜபக்ஸ பேச்சுவார்த்தை நடத்திவருவதாகத் தெரியவருகிறது. ஹிஸ்புல்லாவை மீண்டும் இணைத்துக் கொண்டு பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. | 
Saturday, 17 May 2008
ஹிஸ்புல்லா தரப்பு உறுப்பினர் ஒருவரை அரசாங்க தரப்பிற்கு இழுக்க பெசில் ராஜபக்ஷ முயற்சி
Subscribe to:
Post Comments (Atom)
 

 
 
 

No comments:
Post a Comment