கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் செயலாளர் நாயகம் ஹசன்அலி தெரிவுசெய்யப்படவுள்ளதாக முஸ்லீம் காங்கிரஸ் தகவல் தெரிவிக்கின்றன.
 மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் நோக்கில் நாடாளுமன்ற பதவியை துறந்த ஹசன் அலி, அம்பாறை மாவட்டத்தில் அதிககூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார். இதேவேளை கிழக்கு மாகாண சபை ஆரம்ப கூட்டம் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண அளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன் போது சபை தலைவர் தெரிவு இடம்பெறும் எனவும், அன்றைய தினம் மாலை மாகாண சபையின் கொள்கை தொடர்பான உரையை கிழக்கு மாகாண சபையில் ஆளுநர் நிகழ்த்த உள்ளதாகவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய மோனகுருசாமி, போனஸ் உறுப்பினராக நியமிக்கப்பட்டு, அமைச்சு பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகவும் அவ்வாறு இல்லாது போனால், மோனகுருசாமிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் பதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
 

 
 
 

No comments:
Post a Comment