உலகத்தில் சர்வதேச கடல்வழியான போக்குவரத்தில் இந்துசமுத்திரப் பிராந்தியத்திலேயே அதிகளவு இடம்பெறுவதால் தெற்காசிய பிராந்திய துறைமுகங்களைப் பாதுகாக்கும் திட்டமொன்று ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், சிறிலங்கா, பங்களாதேஸ், கொமரூஸ், மடகஸ்கார், மாலைதீவு, மொறீசியஸ் மற்றும் ஓமான் போன்ற நாடுகள் இணைந்து தெற்காசிய பிராந்திய துறைமுக பாதுகாப்பு ஒத்துழைப்பு கடந்த திங்கட்கிழமை மாலைதீவில் ஆரம்பித்துவைத்தன.
“கடல்மார்க்கமாக ஏற்படும் அச்சுறுத்தலை இணைந்து முகம்கொடுப்பதற்கு 9 நாடுகள் இணைந்துள்ளன. இந்த மாநாடானது பிராந்திய நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை வளர்த்துக்கொள்வதற்கும், பலப்படுத்திக்கொள்வதற்கும் சிறந்ததொரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது” என அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மாலைதீவு ஜனாதிபதி அப்துல் கயூம் தெரிவித்துள்ளார்.
பலநாடுகள் இணைந்து ஏற்படுத்தியிருக்கும் இந்த அமைப்பில் அமெரிக்கா உறுப்பு நாடாக இல்லாதபோதும் தனது உதவிகளை வழங்க முன்வந்திருப்பதாக மாலைதீவுகள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ரீதியில் நடைபெறும் கடல்மார்க்கமான போக்குவரத்துக்களில் பெரும்பகுதி இந்துசமுத்திரக் கடற்பரப்பின் ஊடாகவே இடம்பெறுவதால் தெற்காசியப் பிராந்திய நாடுகளின் துறைமுகங்களைப் பாதுகாக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
கடல்மார்க்கமாக நாடுகளுக்கு ஏற்படக் உயிர் ஆபத்துக்கள் மற்றும் பொருளாதார ஆபத்துக்களைத் தடுப்பதற்கு இவ்வாறான வலைப்பின்னலடன் கூடிய துறைமுகப் பாதுகாப்பு அவசியமானது என ஐக்கிய அமெரிக்காவின் கரையோரப் பாதுகாப்புப் பிரவின் ரியர் அட்மிரல் கிரிக் ஈ.போன் தெரிவித்தார்.
“சட்டவிரோதமான மீன்பிடி, ஆட்கடத்தல்கள், சட்டவீராதமாகப் பொருள்களைக் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுடன் கடல்மார்க்கமானபயங்கரவாத நடவடிக்கைகளையும் தடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.
தெற்காசியப் பிராந்திய துறைமுகள் பாதுகாப்புக் கூட்டறவு அமைப்பு உருவாக்கப்பட்டதன் மூலம் தெற்காசிய குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவை தடுக்கப்படும் என்ற தெளிவான செய்தி மற்றும் இந்துசமுத்திரப் பிராந்தியத்திலுக்கும் பயங்கரவாதிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என ரியர் அட்மிரல் தெரிவித்தார்.
பொருள்களை ஏற்றிச்செல்லும் சரக்குக் கப்பல்கள் மற்றும் சர்வதேச துறைமுகங்கள் போன்றனவே பயங்கரவாதிகளின் முக்கிய இலக்குகளாக இருக்கும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
தெற்காசியப் பிராந்திய நாடுகளின் கடற்படைத் தளபதிகள் மாநாடு கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்றிருந்தது. இந்த மாநாட்டில் பிராந்திய நாடுகளுக்கிடையிலான வலைப்பின்னலொன்றை ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment